Yesuvin Paathathai Kanneeraal song lyrics

இயேசுவின் பாதத்தை கண்ணீரால் கழுவிய

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இயேசுவின் பாதத்தை கண்ணீரால் கழுவிய
மரியாளைப் போல் இருப்பாய் -இயேசுவின்
வார்த்தையை கேட்டு பின்சென்ற நல்
சீஷனைப் போல் இருப்பாய் (நீயும்) -2
பாதம் கல்லில் என்றும் இடறாமலே
உன்னை கரங்களில் ஏந்திடுவார் -2
பரலோக ராஜ்யத்தை உனக்காய் அலங்கரித்து
காத்து வைத்திடுவார் – உனக்காய்-2
2.வார்த்தையால் உலகத்தை படைத்த தேவன்
உனக்காய் மரித்தாரே
ஜீவனைக் கொடுத்து பாவத்தை தொலைத்து
உயிர்த்தெழுந்தாரே இயேசு
மார்பினில் சாய்ந்து சீஷனைப் போல
உன்னையும் அணைத்துக்கொள்வார்
நேசரின் குரலைக் கேட்டிடு சபையே
என்றும் விழித்திருப்பாய்