Yezaigalukku Irrakam Kaatum Deivame lyrics

ஏழைகளுக்கு இரக்கம் காட்டும் தெய்வமே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஏழைகளுக்கு இரக்கம் காட்டும் தெய்வமே
பாவிகளுக்கு பரிந்து பேசும் தெய்வமே
உம்மை – ஆராதிக்க ஆயுள் போதாது
உமக்கு – நன்றி சொல்ல நாவுகள் போதாது
அப்பா உம் பாதத்துல அமரணும்
ஆனந்த பலிகளெல்லாம் செலுத்தனும்
அந்தி, சந்தி, மதியத்திலும் ஜெபிக்கனும் – ஐயா
சீயோனின் (ஐயா என்) சிறையிருப்ப மாத்துங்க
சாம்பலுக்கு சிங்காரத்த உடுத்துங்க
சத்தியத்தின் பாதையில நடத்துங்க – ஐயா
மகிமையின் மேகம் வந்து இறங்கனும்
மாறாத கிருபை வந்து தாங்கனும்
உன்னதத்தின் வல்லமை வந்து நடத்தனும் – ஐயா
அங்கங்களும் அவயங்களும் அடங்கனும்
ஆவியும் ஆத்துமாவும் மகிழனும்
கர்த்தருக்கு மகிமையாக மரிக்கனும் (இருக்கனும்) – ஐயா