yootha kulaththin singkam meentum varuvar

யுத்தக் குலத்தின் சிங்கம்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

யூத குலத்தின் சிங்கம் மீண்டும் வருவார்
மகனே… மகளே…. நீ ஆயுதமா இரு
ஒருவராய் பெரிய காரியம் செய்பவரே
அவராலே எல்லாம் ஆகுமே-2
இயேசு சொன்னால் ஆகுமே
கட்டளை இட்டால் நிற்குமே-2 – ஒருவராய்
சூரியனும் என் தேவன் அல்லே
சந்திரனும் என்னை படைத்தவன் அல்லே
இவைகளை படைத்த தெய்வமே என் ஆண்டவர்
சூரியனும் என் தேவன் அல்லே
சந்திரனும் என்னை படைத்தவன் அல்லே
இவைகளை படைத்த தெய்வமே என் ஏசுவே
அகில உலகத்தை படைத்தவர்
சர்வ வல்லவர் சர்வ சிருஷ்டிக்கு எஜமான்
எந்தன் ஏசுவே
யெகோவா ஷம்மா யெகோவா ஷாலோம்
யெகோவா நீசி யெகோவா ருஹுவ – ஒருவராய்
கல்லை நான் வணங்குவதில்லை
மரத்தை நான் நம்புவதில்லை
என்னை படைத்த தேவனை நான் வணங்குகிறேன்
கல்லை நான் வணங்குவதில்லை
மரத்தை நான் நம்புவதில்லை
உயிரோடு இருக்கும் யேசுவையே நான் நம்புகிறேன்
அண்டை சராசரத்தை படைத்தவர்
சர்வ வல்லவர்
அகிலஉலகத்தின் நாயகன் எந்தன் ஏசுவே
யெகோவா ஷம்மா யெகோவா ஷாலோம்
யெகோவா நீசி யெகோவா ருஹுவ – ஒருவராய்